ஊழலுக்கெதிரான செயல்முறைத் திட்டம் தொடர்பாக 
ஊழல் தொடர்பாக எதிர்நடவடிக்கைகளைப் பலப்படுத்துதல், மற்றும் சுனாமி (tsunami) குறித்து அபிவிருத்தி உதவியின் பணக்கொடுக்கல் ஒழுங்குகளைக் கண்காணித்தல் ஆகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, இலங்கையின் ஊழலுக்கெதிரான செயல்முறைத்திட்டம் (ஊ.எ.செ.தி) யுஸ்ஏயிட் நிறுவனத்தின் உதவியுடன் (USAID, United States Agency for International Development) தொடக்கப்பட்டது. இதனுடைய நிறைவேற்றல் பணி இலகுவாகச் சாதிக்கக் கூடியதல்ல. ஆதலால் இப்பணி தொடர்பாக தனியார் பிரசைகள், சிவில் சமுகத்தினர், மற்றும் செய்தொழில் அமைப்புகள், மற்றும் தேர்தல் மூலமாகவும் நியமனமுறையிலும் பதவியிலிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் ஆதரவும் முக்கியமாகத் தேவைப்படுகின்றது. இந்தச் செயல்முறைத் திட்டம் சனவரி 2006 இல் தொடங்கியது. அது செப்ரெம்பர் 2007 வரை நீடித்துச் செல்கின்றது.
சுனாமிக்குப் பின்னான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீள்கட்டுமான செயல்முறைத் திட்டம் அமைத்தல் என்பவை குறித்து பொறுப்புக்கூறல், மற்றும் ஒளிவின்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஊ.எ.செ.தி இன் கீழ் இலங்கைப்பங்காளர் நிறுவனங்கள், காப்பாளர் அமைப்புகள் என்பவற்றிற்குப் பயிற்சியும் தொழில் நுட்பவசதிகளும் வழங்கப்படவுள்ளன. ஊ.எ.செ.தி பின்வரும் முக்கிய பணிகள் மீது கவனம் செலுத்துகின்றது. (1) நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு வகிக்கும் பிரதான நிறுவனங்களின் (கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம், இலஞ்சக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைசெய்யும் ஆணைக்குழு போன்றவை) என்பவற்றின் செயற்பாட்டாற்றலைப் பலப்படுத்துதல், (2) சுனாமி மீள் கட்டுமானத்திட்டங்களை கண்கானித்தல் மற்றும் அவைபற்றி அறிவித்தல் பணிகள் ஆகியவற்றில் பிரசைகளின் பங்களிப்பினை அதிகரித்துக் கொள்ளுதல், (3) ஊழல்கள் குறித்து காரணங்கள், விளைவுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வினை உயர்த்துவதற்கான ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்துதல்.
கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைசெய்யும் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்குவதுடன், ஊ.எ.செ.தி பன்னிரண்டு உள்ளுர் சனசமுகங்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான பயிற்சினையும் கொடை உதவியினையும் வழங்கமுன்வந்துள்ளது. அத்துடன் சுனாமி தாக்கத்தினை ஏற்படுத்திய வலையத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் நடாத்துவதற்கும் ஒழுங்குகள் செய்யப்படும். உள்ளுர் மற்றும் தேசமட்டத்திலான சிவில் சமுக அமைப்புகளின் ஈடுபாடு கொண்ட புதிய வழியமைக்கும் அணுகுமுறைகளை உள்ளடக்கி ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிறு அளவான நன்கொடைத் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கப்படும். ஊழலை எதிர்த்துப்போராடுவதற்கான எதிர்கால வழிமுறைகளுக்கான வழிகாட்டல் தொடர்பாக ஒரு செயல் நடவடிக்கைத் திட்டம் (Action Plan) தயாரிக்கப்படும்.
செயல்முறைத் திட்டம் பற்றிய மேலோடுபார்வை
ஊழல் எதைக் குறிப்பிடுகின்றது?
ஊழல், ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை தவறாகத்தனியார் நயம் கருதிப்பயன்படுத்தலைக் குறிப்பிடுகின்றது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒரு பாரதூரமான தடையாக விளங்குகின்றது. ஊழல் வெளிநாட்டு முதலீடு தொடர்பாக ஊக்கமின்மைகளை விளைவிக்கின்றது, ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையினைப் பலவீனப்படுத்துகின்றது. மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை சட்டவிரோத மற்றும் நேர்மையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடத்தூண்டுகின்றது. மேலும், ஊழல் பிரசைகள் தங்களுடைய தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் தலைவர்கள் மீது வைத்திருக்கும் அவர்களின் நேர்மை பற்றிய நம்பிக்கை பற்றுறுதி ஆகியவை குறைவதற்குப் பொறுப்பாகின்றது. அது சொத்துக்கள் தொடர்பான உரிமைகளின் பாதுகாப்பு என்பதைக் குறைப்பதுடன் சட்டவாட்சியினையும் பாதிக்கின்றது. ஊழல் அரசாங்கத்தின் சட்டப்படியான, முறைமை வாய்ந்த முதலீடுகளுக்கு கிடைக்கும் முதலீடுகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றுக்கு வேண்டிய வளங்களைக் குறைக்கின்றது. இதனால் வறியவர்களையும் வசதியற்றவர்களையும் அளவுமீறி பெரிதாக பாதிக்கும் விளைவுகள் ஏற்படுகின்றன.
ஊழல் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது. சிறு அளவான வாகன ஓட்டத்தில் ஏற்படும் ஒழுங்கு மீறல் மீது தண்டனையாக விதிக்கப்படும் ரூ 1000, பல மில்லியன் ரூபாய்களைக் கொண்ட VAT (கூட்டப்படும் பெறுமதி மீதுவரி) தொடர்பான மோசடி, மற்றும் மிக நுட்பமாகவும், சூழ்ச்சிநயம் உடையதாகவும் செய்யப்படும் பாரிய நிதி மோசடிகள் போன்றவை வெவ்வேறு நிலைகளைக் காட்டுகின்றன. எல்லாவகையான ஊழல்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றைத்தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுதல் வேண்டும், பல்வேறுவகையான ஊழல் நடவடிக்கைகள் குறித்து எதிரான பல்வேறுமுறைகளும் விரிவான பதிலிறுப்புகளும் தேவைப்படுகின்றன. ஊ.எ.செ.தி இன் பயிற்சியும் தொழில்நுட்ப உதவியும், ஊழல்கள், ஊழல் பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து நடவடிக்கைகள் எடுப்பதில் தற்கால புதிய அணுகுமுறைகளை புகுத்த எண்ணியுள்ளது.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் குற்றவழக்குத் தொர்தலும் தடுப்பு முறைகளைக் கையாளுதலும்.
ஊழல் குறித்த எதிர் நடவடிக்கைகள் செயல்முறைத்திட்டங்கள் என்பவற்றில் இருவகை உபாய அணுகுமுறை தேவைப்படுகின்றது. அவற்றில் ஒன்று, தவறிளைப்பவர்கள் பற்றிய விசாரணையும் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடர்தலும், மற்றையது ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள். இவ்விரு முறைகளும் ஊழல் தொடர்பான எதிர் நடவடிக்கைகளில் சேருதல் வேண்டும். தடுப்பு வழிமுறைகளில் முக்கியமானவை பின்வருமாறு குறிப்பிடலாம் : உள்ளான கட்டுப்பாடுகள், செயல்முறைத் திட்டங்கள் (Programs) செய்திட்டங்கள் (Projects) ஆகியவை தொடர்பாக நீதிப்பரிசோதனைகள் நேரத்தோடு செய்தல், செயல்முறைத்திட்டங்கள், செய்திட்டங்கள் ஆகியவற்றின் செயற்திறன் பற்றிய செயலாற்ற மதிப்பீடு, செய்திட்டங்கள் பற்றிய மேற்பார்வையில் பொதுமக்களின் அதிகரித்த பங்கேற்றல், மற்றும் பொதுநிருவாகத்தில், நேர்மை, வாய்மை மற்றும் பொறுப்புக் கூறுதல் ஆகியவை பற்றிய ஒளிவுமறைவில்லாத பண்பாட்டு முறைகள் விருத்திசெய்தல். சட்டரீதியாக வழக்குத் தொடர்தல் மற்றும் தடுப்பு உபாயங்கள் ஆகியவை இரண்டும் பின்பற்றப்படுவது தேவையாகின்றது. அவற்றினூடாக, அர்த்தமுள்ள பெறுபேறுகளை அடைந்து கொள்வதும், அரசாங்க நிறுவனங்கள் மீது நம்பிக்கையினையும் பற்றுறுதியினையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதும் பிரதான குறிக்கோள்களாக அமைகின்றன.
இலங்கையில் ஊழல் ஒரு பழமை வாய்ந்த, ஆழமாக வேரூன்றிய பிரச்சினை, இது சமுகத்திலும், அரசாங்கத்திலும் உள்ள பல துறைகளிடையே ஊடறுத்துச் செல்கின்றது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், ஊ.எ.செ.தி ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்யமுடிகின்றது, ஆனால் இது ஒரு ஆரம்பமாகவே இருக்கமுடியும். ஊழல் என்னும் கொடிய நிகழ்வினை அகற்றுவதற்கு பல ஆண்டுகள், அல்லது தசாப்தங்கள் எடுக்கலாம். அவ்வாறாயினும், இப்போராட்டம் பயன்தரும் முயற்சி என்பதை நம்பிக்கையுடன் கூறமுடிகின்றது.
இலங்கையின் ஊழலுக்கு எதிரான செயற்திட்டம் குறித்து யுஸ்எயிட் நிறுவனத்தின் குறிக்கோள்கள்.
ஊ.எ.செ.திட்டம் பிரதானமாக மூன்று குறிக்கோள்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது:
- கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களம் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைசெய்யும் ஆணைக்குழு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்படும் வேலைகளின் செயற்திறனையும் தரத்தினையும் அதிகரித்தல்,
- பிரசைகள் மற்றும் சிவில் சமுகத்தினரினால் அரசாங்க செயல் நடவடிக்கைகள் மற்றும் செய்திட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிப்புச் செய்யுமிடத்து ‘சிறந்த பழக்கவழக்க’ நுண்முறைகளை நடைமுறையில் பயன்படுத்தல்.
- பொதுசனத்தின் விழிப்புணர்வினை அதிகரித்தல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் ஆர்வமுள்ள, அக்கறையுள்ள (பொதுத்துறை, தனியார்துறை, மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்றவை) பிரிவினரிடையே கூட்டு முயற்சியின் அடிப்படையில் ஊழலுக்கெதிராகச் செயற்படுதல்.
யுஸ்எயிட். நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள ‘இலங்கைக்கான சுனாமி மீட்பு, மீள்கட்டமைத்தல் நிதிய’, அமெரிக்க டொலர் 135 மில்லியனில் (US$ 135 million) பகுதி நிதியீட்டமாக ஊ.எ.செ.தி நடவடிக்கைகளுக்கான நிதியம் கிடைத்துள்ளது.
நன்கொடை உதவிக்கு விண்ணப்பித்தல்
ஊ.எ.செ. தி பல்வேறு சிவில் சமுக அமைப்புகளுக்கு, ஊ.எ.செ.தி இன் குறிக்கோள்களுடன் உடன்பாடுடைய முறையில், ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்துமிடத்து, ஆதரவு வழங்க முன்வருகின்றது. இந்த ஆதரவு சிறு கொடை நிதிகளாக வழங்கப்படும். ஊ.எ.செ.தி ஒரு ‘வருடாந்த செயல்முறைத்திட்டம். பற்றிய அறிவிப்பை’ வெளியீட்டுள்ளது (வ.செ.அ) (Annual Program Statement, APS) இதில் தகுதியுடைய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கொடை நிதிசம்பந்தமாக கோரப்பட்டுள்ளன. வருடாந்த செயல்முறைத்திட்டத்தின் அறிவிப்பின் விளக்க மூலத்தில், விண்ணப்பமொன்று சமர்ப்பித்தல் தொடர்பாக தேவையான தகவல், செயல்முறைத்திட்டத்தின் குறிக்கோள்கள் உள்ளடங்கலாக, தகுதித் தேவைகள், நிதிவசதியின் எல்லைகள், மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
- வ.செ.அ. உறை-மே 17, 2006 (ஆங்கிலம், எம.எஸ் சொல் ஆவணம்)(புதுச் சாளரத்தில் திறக்கின்றது)
- வ.செ.அ உiறு - மே 17இ 2006 (தமிழ், செ.தி.ஆ.ப, செயல்முறைத்திட்ட ஆவணப்படிவம்)(புதுச் சாளரத்தில் திறக்கின்றது)
- வ.செ.அ. உறை - மே 17, 2006 (சிங்களம், செ.தி.ஆ.ப, செயல்முறைத்திட்ட ஆவணப்படிவம்) (புதுச் சாளரத்தில் திறக்கின்றது)
- ஊ.எ.செ. தி நன்கொடை உதவிகளின் விண்ணப்ப படிவம் - மே 17, 2006 (ஆங்கிலம், எம்.எஸ் சொல் ஆவணம்)(புதுச் சாளரத்தில் திறக்கின்றது)
PDF காட்சியினூடாக, ஏற்கனவே இவ்வசதி அமைக்கப்படாதிருந்தால், பதிவு இறக்கம் செய்யவும் (புதுச் சாளரத்தில் திறக்கப்படுகின்றது)

